லால்குடி ஒன்றியம் அப்பாத்துரை ஊராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த மக்கள் எதிர்ப்பு: 100 நாள் வேலை பறிபோகும் அபாயம்

திருச்சி. அக்.1: திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலெட்சுமி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளுடன் வந்திருந்த பொதுமக்கள் மனு அளித்தனர். அதில் திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் வரகுப்பையை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் என்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி மனு அளித்தனர். அந்த மனுவில் வரகுப்பை பகுதியில் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள மக்கள் அன்றாட தின கூலி வேலை செய்து அதில் கிடைக்கும் வருமானத்தை கொண்டு பிழைப்பு நடத்தி வருகின்றனர். மற்ற கிராமங்களில் இருக்கக்கூடிய மக்களுக்கு இவர்கள் வசிக்கும் வர குப்பை பகுதியில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்படுகிறது. ஆனால் பல ஆண்டுகளாக இதே பகுதியில் வாழ்ந்து வரும் தங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்படவில்லை. எனவே தங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கிட வேண்டும் தற்போது இந்த பகுதியில் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர் எனவே மாவட்ட ஆட்சியர் தங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கி எங்களுடைய வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மனு-2
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சிறுகனூருக்கு அருகில் உள்ள முல்லை நகர் பகுதியைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் மாவட்ட கலெக்டரிடம் பேருந்து வசதி கேட்டு மனு அளித்தனர். முல்லை நகர் பகுதியில் இருந்து வழக்கமாக காலை 6.30 மணிக்கு ஒரு பேருந்தும் இரண்டாவதாக 9.30 மணிக்கு திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் வரை பேருந்துகள் இயக்கப்படுகிறது. ஆனால் பள்ளிகள் காலை 8.30 மணிக்கு திறக்கப்படுவதால் இப்பகுதியில் இருந்து பள்ளி செல்லும் குழந்தைகள் குறிபிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

முல்லை நகர் பகுதியில் இருந்து வழக்கமான நேரத்தில் இயக்கப்படும் பேருந்தை தவிர்த்து அதற்கு இடைப்பட்ட நேரத்தில் பேருந்து சேவை வழங்கினால் குழந்தைகள் உரிய நேரத்தில் பள்ளிக்கு செல்ல ஏதுவாக இருக்கும் என்று அப்பகுதியை சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகள் தங்களுடைய பெற்றோருடன் மனு அளிக்க வந்தனர்.

மனு – 3
திருச்சி புறநகர் மாவட்ட இந்திய மாணவர் சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு மனு அளித்தனர். அம்மனுவில், திருவெறும்பூர் அரசு ஐடிஐ மற்றும் துவாக்குடி அரசு கலைக்கல்லூரி எதிரில் இயங்கிவரும் மதுபானக் கடை மற்றும் பார் இரண்டையும் மூட வலியுறுத்தி, 5 முறைக்குமேல் மனு அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்காக போராட்டம் நடத்திய நிலையில், திருவெறும்பூர் வட்டாட்சியர் கடந்த நவம்பர் மாதம் மூடுவதாக உறுதியளித்தும் இதுவரை மதுபானக்கடையை மூடவில்லை. எனவே மாவட்ட கலெக்டர் கல்லூரி எதிரில் செயல்படும் மதுபானக்கடையை உடனே மூட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

மனு – 4
திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், மேலவாளாடி அப்பாத்துரை கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் 100க்கும் நேற்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில், கடந்த 150 வருடங்களுக்கு மெலாக இந்த கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றோம். இங்கு அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, போக்குவரத்து வசதி, கழிப்பறை வசதி, உள்ளிட்டவை போதுமானதாக இல்லை. 100 நாள் வேலைவாய்ப்பு இழக்கும் நிலை ஏற்படும், விவசாயம் தொழிலை நம்பியே வாழும் இந்த கிராமத்தை கிராம ஊராட்சியிலிருந்து நகராட்சியாக மாற்றம் செய்திட அரசு எடுத்துள்ள முடிவை மாவட்ட கலெக்டர் மறுபரிசீலனை செய்து, தங்களுடைய கிராமத்தில் அடிப்படை வசதிகளை செய்து கொடுத்திடவும், கிராம ஊராட்சியிலிருந்து நகராட்சியாக அப்பாத்துரை வருவாய் கிராமத்தினை மாற்றம் செய்வதிலிருந்து விலக்கு அளிக்கவும் ஆவண செய்திட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post லால்குடி ஒன்றியம் அப்பாத்துரை ஊராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த மக்கள் எதிர்ப்பு: 100 நாள் வேலை பறிபோகும் அபாயம் appeared first on Dinakaran.

Related Stories: