ரேஷன் கடைக்கான கட்டிடம் அவசியம்: பொதுமக்கள் கோரிக்கை

மதுரை, மே 20: மதுரை மதிச்சியம் பகுதி மக்கள் எம்எல்ஏ பூமிநாதனிடம் வழங்கிய கோரிக்கை மனு: மதுரை மாநகராட்சி, வார்டு எண். 30ல் வசிக்கும் எங்களுக்கு பாண்டியன் கூட்டுறவு நியாய விலைக் கடைகள் இரண்டு செயல்பாட்டில் உள்ளது. இவை வாடகை கட்டிட்களில் இயங்கி வருகிறது. இவற்றுக்கு சட்டமன்ற நிதி ஒதுக்கீட்டில் கட்டிடம் கட்டித்தர வேண்டும். மேலும், ராமராயர் மண்டபம் கோயிலுக்கு செல்லும் வழியில் பாதாள சாக்கடை அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் வெளியாகி வருகிறது.

எனவே இந்த பாதாள சாக்கடையை பிரதான இணைப்புடன் சேர்த்து கழிவுநீர் வெளியாகாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வார்டு பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என தொடர்ந்து கோரி வருகிறோம். அதற்கான இடமும் உள்ளதால், ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

The post ரேஷன் கடைக்கான கட்டிடம் அவசியம்: பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: