ரூ.323.03 கோடி செலவில் 11-ம் வகுப்பு பயின்ற 6,35,947 மாணவர்களுக்கு மிதிவண்டிகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!!

சென்னை : மேல்நிலைப் கல்வி பயிலும் மாணவ, மாணவியர் சிரமமின்றி பள்ளிக்கு செல்லும் வகையில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பகுதியாக அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவ, மாணவியருக்குக்கும், தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கும் தமிழ்நாடு அரசால் மிதிவண்டிகள் வழங்கப்படுகின்றன.  அந்த வகையில்,  தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (25.07.2022) சென்னை, நுங்கம்பாக்கம், மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 2021-2022ஆம் கல்வியாண்டில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பகுதியாக அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு பயின்ற 6,35,947 மாணவர்களுக்கு 323 கோடியே 3 லட்சத்து 61 ஆயிரத்து 42 ரூபாய் செலவில் மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கும் அடையாளமாக 10 மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினார்.  இந்த நிகழ்ச்சியில், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் திரு.ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்  துறை அமைச்சர் திரு. பி.கே. சேகர்பாபு, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் திருமதி ஆர்.பிரியா, சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா. எழிலன், துணை மேயர் திரு. மு. மகேஷ் குமார், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மைச் செயலாளர்  திரு.ஆ. கார்த்திக், இ.ஆ.ப., பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையர் திரு. அணில் மேஷ்ராம், இ.ஆ.ப., ஆதிதிராவிடர் நல ஆணையர் திருமதி சோ. மதுமதி, இ.ஆ.ப., பள்ளிக் கல்வித்துறை ஆணையர் திரு. க. நந்தகுமார், இ.ஆ.ப.,  சென்னை மாவட்ட ஆட்சியர் திருமதி சு. அமிர்த ஜோதி, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். …

The post ரூ.323.03 கோடி செலவில் 11-ம் வகுப்பு பயின்ற 6,35,947 மாணவர்களுக்கு மிதிவண்டிகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!! appeared first on Dinakaran.

Related Stories: