ராஜபாளையம், ஜூலை 6: ராஜபாளையம் அருகே செட்டியார்பட்டியில் உள்ள கடைகளில் தமிழில் பெயர் பலகை அமைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராஜபாளையம் அருகே செட்டியார்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட புத்தூர் சாலையில் ஏராளமான வணிக நிறுவனங்கள் உள்ளன. குறிப்பாக வடமாநிலங்களில் இருந்து ஆயத்த ஆடைகளுக்கு தேவையான மூலப்பொருட்கள் விற்பனை கடைகள், லாரி புக்கிங் அலுவலகங்கள் அதிகளவில் உள்ளன. ஆனால் இது போன்ற கடைகளில் தமிழில் பெயர்ப் பலகை வைக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் சிரமமடைகின்றனர். எனவே விதிமுறையின்படி கடைகளில் தமிழில் பெயர்களை அமைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post ராஜபாளையத்தில் தமிழில் பெயர் பலகை வைக்க கோரிக்கை appeared first on Dinakaran.
