ராகுல்காந்தி பிறந்தநாள் விழா

தர்மபுரி, ஜூன் 20: தர்மபுரி மாவட்ட காங்கிரஸ் சார்பில் தலைவர் ராகுல்காந்தியின் 55வது பிறந்த நாள் விழா, கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் தீர்த்தராமன் தலைமை வகித்தார். பட்டாசு வெடித்து, கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. மாவட்ட பொருளாளர் வடிவேல், பொதுக்குழு உறுப்பினர்கள் நரேந்திரன், சண்முகம், மோகன்குமார், கிருஷ்ணன், காளியம்மாள், ஜெயசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் வேடியப்பன் வரவேற்றார். வட்டார தலைவர்கள் ராஜேந்திரன், வேலன், காமராஜ், வழக்கறிஞர் சந்திரசேகர், வெங்கடாசலம், ஞானசேகர், மணி, பெரியசாமி, சிலம்பரசன் மற்றும் குமரவேல், தங்கராஜ், சுப்பிரமணி ராபர்ட், சிவலிங்கம், சென்னகேசவன், வெற்றிவேந்தன், ரோஜா, மணிகண்டன் மற்றும் செல்வம், குப்புசாமி, பேராசிரியர் சிங்காரம், வழக்கறிஞர் ஜெயராமன், கோவிந்தசாமி, மோகன், குமார், ராஜா, திருப்பதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பாப்பாரப்பட்டி: பாப்பாரப்பட்டியில், பென்னாகரம் வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில், ராகுல்காந்தி பிறந்தநாள் விழா நடந்தது. பாப்பாரப்பட்டி ஏரிக்கரை ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதில், வட்டார காங்கிரஸ் தலைவர் சண்முகம், நகர காங்கிரஸ் தலைவர் தங்கராஜ், கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதைபோல் தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக்கழக ஐஎன்டியூசி தொழிற்சங்கம் சார்பில், நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தியின் 55வது பிறந்த நாள் விழா, நேற்று தர்மபுரியில் நடந்தது. இதையொட்டி சாலை விநாயகர் கோயிலில், மகிளா காங்கிரஸ் மாநில துணை தலைவர் காளியம்மாள் தலைமையில் சிறப்பு பூஜைகள், அர்ச்சனைகள் செய்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் ஐஎன்டியூசி மண்டல தலைவர் தங்கவேல், பொதுச்செயலாளர் ரமேஷ், துணை தலைவர் மாரியப்பன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post ராகுல்காந்தி பிறந்தநாள் விழா appeared first on Dinakaran.

Related Stories: