மைண்ட் ஷேர் இந்தியா 5 விருதுகளை வென்றது

சென்னை: குரூப் எம்-ன் ஊடக ஏஜென்சி நிறுவனமான மைண்ட்ஷேர் இந்தியா, பெஸ்டிவல் ஆப் மீடியா குளோபல் விருதுகள் 2021- என்ற விழாவில், ஏஜென்சி ஆப் தி இயர் என்ற பட்டத்தையும், 2 தங்கம், 3 வெள்ளி என 5 விருதுகளையும் பெற்றுள்ளது. மேலும், கிராண்ட் பிரிக்ஸ் என்ற டைட்டிலையும் வென்றது. இந்த ஆண்டு உலக கலந்துரையாடல் குழுவில் வென்ற ஒரே நிறுவனம் மைண்ட்ஷேர். பிரபல பிராண்டுகளுக்கான சந்தைப்படுத்துதல், ஒருங்கிணைத்தல் மற்றும் மின்னணு ஊடகத்தை சிறப்பாக பயன்படுத்தியது போன்றவைக்காக இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. வீட்டிலிருந்து வீல் கேரியர் என்ற மார்க்கெட்டிங் பிரசாரம் இதில் முக்கியத்துவம் வாய்ந்தது. இது மொபைல் அடிப்படையிலான படிப்பு தளமாகும்.இதுகுறித்து இந்நிறுவன தெற்கு ஆசியாவின் தலைமை செயல் அதிகாரி பார்த்தசாரதி மண்டையம் கூறுகையில், “பெஸ்டிவல் ஆப் மீடியா குளோபல் விழாவில் விருது வென்றதில் மைண்ட்ஷேர் இந்தியா உற்சாகமாக இருக்கிறது. ஆசியா பசிபிக் பகுதிக்கான விழாவில் பெற்ற விருதுக்கு பிறகு மைண்ட்ஷேர் உலக அளவிலான நிகழ்ச்சியில் விருது வென்றுள்ளது. இந்த உலகளாவிய அங்கீகாரம் எங்கள் அணிகளுக்கு ஒரு சிறந்த தருணம். இந்த பிரசாரங்கள் கொரோனா காலத்தில் நுகர்வோர் மனநிலையிலும், செயல்பாட்டிலும் ஏற்பட்ட கடுமையான மாற்றங்களை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன ” என்றார். …

The post மைண்ட் ஷேர் இந்தியா 5 விருதுகளை வென்றது appeared first on Dinakaran.

Related Stories: