மே 23ம் தேதி விவசாயிகள் குறைதீர்ப்பு நாள் கூட்டம்

நெல்லை, மே 20: நெல்லை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 23ம் தேதி நடக்க உள்ளது. நெல்லை மாவட்டத்தில் நடப்பு மே மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 23ம் தேதி மாவட்ட கலெக்டர் தலைமையில், கலெக்டர் அலுவலக வளாகத்தின் இரண்டாம் தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் முற்பகல் 11 மணியளவில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் அனைத்துத்துறை அலுவலர்களும் கலந்து கொண்டு விவசாயிகளின் கோரிக்கைகளின் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்க உள்ளனர். எனவே இக்கூட்டத்தில் நெல்லை மாவட்ட விவசாயிகள் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்களும் கலந்து கொள்ளுமாறு கலெக்டர் சுகுமார் கேட்டு கொண்டுள்ளார்

The post மே 23ம் தேதி விவசாயிகள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: