மூதாட்டி முகத்தில் மிளகாய் பொடி தூவி செயின் பறிப்பு

விழுப்புரம், அக். 28: விழுப்புரம் அருகே மாடு மேய்த்துக் கொண்டிருந்த மூதாட்டியிடம் முகத்தில் மிளகாய் பொடி தூவி செயின் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் அருகே பஞ்சமாதேவி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மனைவி இந்திரா(65). இவர் நேற்று ஜெகநாதபுரம் செல்லும் சாலையில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது 15 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் கையில் வைத்திருந்த மிளகாய்பொடியை முகத்தில் தூவிவிட்டு செயினை பறிக்க முயன்றார். அப்போது இந்திரா அந்த செயினை விடாமல் தனது கையில் பிடித்துக் கொண்டதால் செயின் இரண்டாக அறுந்து ஒரு பகுதியை மட்டும் அந்த சிறுவன் பறித்துக் கொண்டு தப்பி சென்றுள்ளார். இதுகுறித்து வளவனூர் போலீசார் விசாரணை நடத்தினர். இந்திரா துணிச்சலாக செயினை கையால் பிடித்ததால் சிறிய பகுதியை மட்டும் அந்த நபர் பறித்து சென்றது தெரியவந்தது.

The post மூதாட்டி முகத்தில் மிளகாய் பொடி தூவி செயின் பறிப்பு appeared first on Dinakaran.

Related Stories: