மும்பை எல்ஐசி ஆபீசில் தீ விபத்து

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் சான்டாக்ரூஸ் பகுதியில் உள்ள இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (எல்ஐசி) அலுவலக கட்டிடத்தில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. எட்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்குச் சென்று, தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டன. இதுவரை யாருக்கும் காயங்களோ, உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘எல்ஐசி நிறுவனத்தின் 2வது மாடியில் செயல்பட்டு வந்த அலுவலகத்தில் உள்ள ‘சம்பள சேமிப்பு திட்டம்’ பிரிவில் தீ விபத்து ஏற்பட்டது. இரண்டாவது மாடியோடு வேறெங்கும் பரவாமல் தீ மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. வார விடுமுறை நாள் என்பதால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது’ என்றனர்….

The post மும்பை எல்ஐசி ஆபீசில் தீ விபத்து appeared first on Dinakaran.

Related Stories: