முன்னேற்றத்தின் வெற்றிப்படிகள்

தொழில்நுட்ப வளர்ச்சி உச்சம் தொட்டுக்கொண்டிருக்கும் இந்த காலத்தில் கடின உழைப்பு தேவையா? இல்லவே, இல்லை… என்கிறது ஒரு புது தியரி. ‘‘‘‘இந்த காலத்தில் புதுமை செய்து வளர்கிறவர்களும், வெற்றிக்கொடி கட்டுகிறவர்களும் கடின உழைப்பால் அதை சாதிப்பது இல்லை, புத்திசாலித்தனமாக உழைத்தே உயர்ந்தார்கள்‘‘‘‘ என்கிறது அந்த புதிய தியரி. பத்து பேர் சேர்ந்து, நாள் முழுக்க கடின உழைப்பை கொடுத்து தோண்டுகிற பள்ளத்தை, ஒரு ஜே.சி.பி இயந்திரம் ஒருசில நிமிடங்களில் தோண்டி விடுகிறது அல்லவா? அந்த புத்திசாலித்தனமான உழைப்பைத்தான் வெற்றியாளர்கள் தருகிறார்கள். படிக்கும் மாணவர்கள், சுயதொழில் செய்கிறவர்கள், வேலைக்கு போகிறவர்கள், புதிய நிறுவனங்களை உருவாக்குகிறவர்கள் என எல்லோருக்கும் இந்த புதுமை வழிதான் பலன் தரும். அந்த வழியில் இருக்கும் சில படிகள் இங்கே… தெளிவாக திட்டமிடுதல்: உங்கள் கனவுகளுக்கும், திட்டங்களுக்கும் வடிவம் கொடுக்க வேண்டியதுதான் உங்கள் முதல்வேலை. அதை உங்களால் சாதிக்க முடியும் என நம்புங்கள். இது, சாத்தியமான பிறகு கிடைக்கும் வெற்றி, வெகுமதி, லாபம் எல்லாவற்றையும் நினைத்துப்பாருங்கள். அந்த ஆனந்தமே தனி. உங்கள் கனவை, உங்கள் வேலையை பற்றி மற்றவர்களுக்கு சொல்வதைவிட, உங்களுக்கு நீங்களே தினம் தினம் சொல்லிக்கொள்ளுங்கள். உங்களுக்குள் பொறுப்புணர்வு கூடுவதை உணர்வீர்கள். என்ன செய்யவேண்டும், அதை எப்படி அடைவது என தெளிவாக எழுதிப்பாருங்கள். பாதையை பழகிக்கொள்பவன், எங்கேயும் வழிகேட்க நிற்பதில்லை.ரோல் மாடல் யார்?: வாழ்க்கையில் ஜெயித்த பலரும் தங்களைப்போலவே தேடலும், தாகமும் கொண்ட நண்பர்களை உடன் வைத்துக்கொண்டு ஜெயித்திருக்கிறார்கள். உங்கள் துறையில் அப்படிப்பட்ட நம்பிக்கை மனிதர்களை தேடிப்பிடியுங்கள். அவர்களோடு பழகிக்கொள்ளுங்கள். அவர்களது வெற்றிக்கதைகளை கேளுங்கள். அவர்கள் என்ன பிரச்னைகளை சந்தித்தார்கள் என்பது புரியும். அந்த பிரச்னைகளில் இருந்து ஒதுங்கி நில்லுங்கள். அவர்கள் வெற்றிக்காக எதையெல்லாம் நம்பினார்களோ, அதையெல்லாம் நம்புங்கள். சாத்தியமுள்ள இலக்கு: நிறைய தோல்விகளுக்கு காரணம், சாத்தியமே இல்லாத இலக்குகளை நிர்ணயித்துக்கொள்வதுதான். அதை அடைய முடியாதபோது, நமக்கு இது சரிப்பட்டு வராது என மொத்தமாக ஒதுங்கிக்கொள்கிறார்கள். வாழ்க்கையில் சாதிப்பதற்கு திட்டங்களும், இலக்குகளும் முக்கியம்தான். ஆனால், நடைமுறைக்கு ஒத்துவராத கற்பனையான இலக்குகளை நிர்ணயிப்பது மிக ஆபத்தானது….

The post முன்னேற்றத்தின் வெற்றிப்படிகள் appeared first on Dinakaran.

Related Stories: