இலுப்பூர்.மே 26: இலுப்பூர் அருகே உள்ள நவம்பட்டி முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி விரதம் இருந்த பக்தர்கள் பால்குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து, அலகு குத்தி. கரும்பு தொட்டில் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இலுப்பூர் அருகே உள்ள நவம்பட்டி முத்து மாரியம்மன் கோயிலில் கடந்த 18ம் தேதி காப்பு கட்டுதல் நிகழச்சியுடன் துவங்கியது. துவங்கிய நாள் முதல் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது. விழாவின், முக்கிய விழாவான திருவிழா நேற்று நடைபெ ற்றது. விரதம் இருந்த பக்தர்கள் நவ ஊரணியில் இரு ந்து பால்குடம் எடுத்துவந்து அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினர். பக்தர்கள் அலகு குத்தியும், தீசட்டி மற்றும் கரும்பு தொட்டில்எடு த்தும் தங்களின் வேண்டுதலை நிறைவேற்றினர். விழா வையொட்டி, அன்னதானம் வழங்கப்பட்டது. சுற்றுபகுதியில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.
The post முத்துமாரியம்மன் கோயில் திருவிழா பால்குடம், அலகு குத்தி நேர்த்திக்கடன் appeared first on Dinakaran.
