சத்தியமங்கலம், ஜூன் 19: சத்தியமங்கலம் காமதேனு கலை அறிவியல் கல்லூரியின் முதலாம் ஆண்டு பட்ட வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது.
விழாவுக்கு காமதேனு கல்வி நிறுவனங்களின் நிறுவனத் தலைவர் பெருமாள்சாமி தலைமை தாங்கினார். கல்லூரியின் செயலர் அருந்ததி, இணை செயலர் மலர் செல்வி, புல முதன்மையர் நிர்மலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் கல்வியாளர் மற்றும் தன்னம்பிக்கை பேச்சாளர் ஜெகநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், ‘‘ஒரு மாணவனின் வாழ்வில் மாதா, பிதா மற்றும் குரு ஆகியோர் ஒழுக்கத்தின் குருக்கள்.
கல்வி என்பது வெறும் புத்தக அறிவல்ல வாழ்வை மாற்றும் சக்தி என்று மாணவர்களுக்கு தாக்கம்’’ என்றார்.
முன்னதாக முதல்வர் குருமூர்த்தி வரவேற்றார்.முடிவில் கணிதத்துறை தலைவர் சக்தி நன்றி கூறினார்.
The post முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா appeared first on Dinakaran.
