மீளவிட்டான் சாலை விரிவாக்கப் பணி

தூத்துக்குடி, ஜூன் 5: தூத்துக்குடி -மீளவிட்டான் சாலை விரிவாக்கப் பணியை அமைச்சர் கீதாஜீவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தூத்துக்குடி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வாகன பெருக்கம், மக்கள் தொகை அதிகரிப்பை தொடர்ந்து பல்வேறு கட்டமைப்பு பணிகளை முறைப்படுத்தி செய்யும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக நெடுஞ்சாலை துறை சார்பில் தூத்துக்குடி -மீளவிட்டான் சாலை 5.5 மீட்டர் அகலம் இருந்ததை 7 மீட்டராக அகலப்படுத்தும் பணி ரூ.4.80 கோடி மதிப்பீட்டில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெற்று வருகிறது. இப்பணியை தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், பெருமாள் கோயில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், வட்ட பிரதிநிதி பாஸ்கர் மற்றும் மணி, அல்பட் உள்பட பலர் உடனிருந்தனர்.

The post மீளவிட்டான் சாலை விரிவாக்கப் பணி appeared first on Dinakaran.

Related Stories: