மதுரை, வண்டியூர் கண்மாய் அருகேயுள்ள பூங்காவில் படகு குழாமிற்கான காற்று நிரப்பிய நவீன மிதவை நடைபாதை பணிகள் நிறைவடையாமல் உள்ளது. இதில் ஆபத்தை உணராமல் பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் மிதவை மீது நடந்தும், ஓடியும் வருவது ஆபத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. இதனை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினகரன் நாளிதழ் கடந்த 26ம் தேதி படத்துடன் செய்தி வெளியிட்டிருந்தது. இதன் எதிரொலியாக மிதவை நடைபாதை செல்லும் பாதை தகர ஷீட்டுகள் கொண்டு அடைக்கப்பட்டுள்ளது.
The post மிதவை நடைபாதை அடைப்பு appeared first on Dinakaran.
