லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பாளர் நியமனத்தில் அதிருப்தி அடைந்துள்ள பகுஜன் சமாஜ் எம்எல்ஏ.க்கள் 6 பேர் அக்கட்சியில் இருந்து விலக இருப்பதாக கூறப்படுகிறது. உத்தரப் பிரதேசத்தில் 10 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் அடுத்த மாதம் 9ம் தேதி நடக்க உள்ளது. இத்தேர்தலில் போட்டியிட பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் அதன் தேசிய ஒருங்கிணைப்பாளரும், பீகார் மாநில பொறுப்பாளருமான ராம்ஜி கவுதம் நேற்று முன்தினம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரை முன்மொழிந்து, பகுஜன் சமாஜை சேர்ந்த 10 எம்எல்ஏ.க்கள் வேட்பு மனுவில் கையெழுத்திட்டிருந்தனர். இந்நிலையில், வேட்பு மனுவில் தங்கள் கையெழுத்து போலியாக போடப்பட்டிருப்பதாக, பகுஜன் சமாஜ் எம்எல்ஏ.க்கள் 4 பேர் நேற்று சர்ச்சையை கிளப்பினர்.
உபி.யில் மாயாவதிக்கு சிக்கல் பகுஜன் சமாஜில் இருந்து 6 எம்எல்ஏ விலக முடிவு: மாநிலங்களவை தேர்தலில் திருப்பம்
