கரூர்: கரூர் மாயனூர் தடுப்பணையில் இருந்து திறந்துவிடப்பட்டுள்ள தண்ணீர் கட்டளை வாய்க்காலில் சீறிப்பாய்கிறது. கரூர் மாவட்டத்தில் தவிட்டுப்பாளையம், கடம்பன்குறிச்சி, வாங்கல் வழியாக மாயனூர் நோக்கி செல்லும் காவிரி ஆற்றின் குறுக்கே மாயனூரில் தடுப்பணை கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த தடுப்பணையில் தேக்கிவைக்கப்படும் தண்ணீரில் இருந்து கட்டளை, தென்கரை போன்ற வாய்க்கால்களில் பாசனத்திற்காக திறந்து விடப்பட்டு வருகிறது. அந்தவகையில், மாயனூர் தடுப்பணையில் இருந்து தண்ணீர் பாசனத்திற்காக கட்டளை வாய்க்காலில் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த வாய்க்கால் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. விவசாயிகள் மகிழ்ச்சி
The post மாயனூர் தடுப்பணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு appeared first on Dinakaran.