மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம்; 482 நபர்களுக்கு பணி நியமன ஆணை

திருச்சி, செப்.29: திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நேற்று நடந்த தனியார் துறை வேலை வாய்ப்பு முாமில் 482 வேலை நாடுநர்களுக்கு பணி நியமண ஆணை வழங்கப்பட்டது. திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நேற்று மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்திய மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. முகாமில் மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் மற்றும் பெரம்பலூர் எம்பி அருண் நேரு ஆகியோர் கலந்து கொண்டு தேர்வான 482 வேலை நாடுநர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினா். முகாமில் பெல் நிறுவனம், ஜ.டி.சி நிறுவனம், டி.வி.எஸ், ரானே பிரேக்ஸ், டைம்ஸ் ப்ரோ, ரிலைன்ஸ் நிப்பான், ஆனந்த் இன்ஜினியரிங், சிவா ஆட்டோ மொபைல்ஸ் உற்பட 154 பிரபல தனியார் தொழில் நிறுவனங்கள், 7 திறன் மேம்பாட்டு பயிற்சி நிறுவனங்கள் என 161 நிறுவனங்கள் கலந்து கொண்டு திருச்சி மாவட்டத்திலுள்ள வேலை நாடுநா்களை நோ்காணல் செய்தனர். இதில் 46 பேர் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு பதிவு செய்தனர்.

முகாமில் 2 ஆயிரத்து 809 ஆண்கள், ஆயிரத்து 873 பெண்கள், மாற்றுத்திறனாளி ஆண்கள் 12 பேர், பெண்கள் 9 பேர் என மொத்தம் 4 ஆயிரத்து 682 வேலை நாடுனர்கள் கலந்து கொண்டனர். இவா்களில் படித்த, வேலை வாய்ப்பற்ற 324 ஆண்கள், 153 பெண்கள், 4 மற்றுத்திறனாளி ஆண்கள், 3 மாற்றுத்திறனாளி பெண்கள் என மொத்தம் 482 வேலை நாடுநா்கள் தேர்வாகி பணி நியமன ஆணைகளை பெற்றனா். 321 ஆண்கள், 257 பெண்கள் என 578 போ் 2ம் கட்ட நோ் காணலுக்கு தோ்வு செய்யப்பட்டனா்.

இந்நிகழ்ச்சியில் வேலை வாய்ப்புத்துறை மண்டல இணை இயக்குனர் தேவேந்திரன், வருவாய் கோட்டாட்சியா் அருள், வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய துணை இயக்குநா் மகாராணி, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலா் மாசில் ஆஷா, ஜமால் முகமது கல்லூரி செயலா் மற்றும் தாளாளா் காஜா நஜீமுதீன், பொருளாளா் ஜமால் முஹம்மது, கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகள், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள், அரசு அலுவலா்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனா்.

The post மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம்; 482 நபர்களுக்கு பணி நியமன ஆணை appeared first on Dinakaran.

Related Stories: