மாணவர்கள் உள்பட 3,000 பேர் தூய்மைப்பணி பெசன்ட் நகர் கடற்கரையில் 75 டன் திடக்கழிவு அகற்றம்: மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு

சென்னை: சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக கடற்கரை பகுதிகளில் அதிகளவில் பிளாஸ்டிக் மற்றும் குப்பை கழிவுகள் கரை ஒதுங்கியது. இந்நிலையில், சென்னை மாநகராட்சியின் ஒப்பந்ததாரரான உர்பசேர் சுமீத் நிறுவனம் மூலம் பெசன்ட் நகர் கடற்கரையை சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வந்தது. அதன்படி இதுவரை 270 டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. இந்நிலையில், நேற்று பள்ளி, கல்லூரி மாணவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரசு, தனியார் துறை ஊழியர்கள், அப்பகுதியில் வசிப்பவர்கள் மற்றும் சென்னையில் உள்ள பல்வேறு மண்டலங்களை சேர்ந்த குடியிருப்போர் நலச் சங்கங்களுடன் இணைந்து  தீவிர தூய்மை பணி நடந்தது. இதில் 3000 பேர் கலந்துகொண்டு, அவர்கள் மூலம் 75 டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டன. கடற்கரையில் இருந்து அதிகளவில் பிளாஸ்டிக் மற்றும் குப்பையை சேகரித்த மாணவர்களுக்கு மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். நிகழ்ச்சியில், துணை ஆணையர் எஸ்.மனிஷ், தெற்கு வட்டார துணை ஆணையர் சிம்ரன்ஜீத் சிங் காஹ்லோன், உர்பசேர் சுமீத் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் மெஹ்மூத் செயட், மேலாண்மை இயக்குநர் ராவுல் மார்டினெஸ்  உட்பட பலர் கலந்து கொண்டனர்….

The post மாணவர்கள் உள்பட 3,000 பேர் தூய்மைப்பணி பெசன்ட் நகர் கடற்கரையில் 75 டன் திடக்கழிவு அகற்றம்: மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: