மனைவி பற்றி இழிவாக பேசிய 3 போலீசை சுட்டு கொன்ற காவலர்

புதுடெல்லி: டெல்லி ஹைதர்பூரில் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் பாதுகாப்பிற்காக பிரவின் ராய், சிக்கிம் காவலர்கள் பின்ட்டோ புட்டியா, இந்திர லால், தன்காங் சுபா ஆகியோர் இந்திய ரிசர்வ் பட்டாலியன் தரப்பில் பணியமர்த்தப்பட்டு இருந்தனர்.இந்நிலையில், நேற்று மதியம் 3 மணியளவில் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து துப்பாக்கி சூடும் சத்தம் கேட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார் சிக்கிம் காவலர்கள் 3 பேர் துப்பாக்கியால் சுடப்பட்டிருப்பதை கண்டனர். இதில் புட்டியா, லால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து கிடந்தனர். தன்காங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இவர்களை சுட்டுக் கொன்ற காவலர் பிரவின் ராய் சமய்பூர் பட்லி காவல் நிலையத்தில் சரணடைந்தார். மனைவியை பற்றி தன்னிடம் இழிவாக, தவறாக பேசியதால் ஏற்பட்ட மனஉளைச்சலில் பிரவின் ராய் அவர்களை சுட்டு கொன்றதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது….

The post மனைவி பற்றி இழிவாக பேசிய 3 போலீசை சுட்டு கொன்ற காவலர் appeared first on Dinakaran.

Related Stories: