மதுரை மாநகராட்சியின் மேற்கு மண்டல குழு கூட்டம்

திருப்பரங்குன்றம், அக். 19: மதுரை மாநகராட்சி மேற்கு மண்டல குழு கூட்டம், திருப்பரங்குன்றத்தில் உள்ள மண்டல அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு மண்டல குழு தலைவர் சுவிதா விமல், தலைமை வகித்தார். துணை மேயர் நாகராஜன், உதவி ஆனையாளர் ராதா, உதவி செயற்பொறியாளர்கள் முத்து, சுப்பிரமணியன், உதவி திட்டமிடுநர் சாந்தி, செயற்பொறியாளர் பாக்கியலெட்சுமி, உதவி வருவாய் அதிகாரி சித்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் மண்டலத்திற்கு உட்பட்ட வார்டுகளை சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். அவற்றுக்கு பதிலளித்த மண்டல தலைவர் சுவிதா விமல் மாமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளை விரைவாக நிறைவேற்ற மேயர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

The post மதுரை மாநகராட்சியின் மேற்கு மண்டல குழு கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: