மண்மேடாகி போன கண்மாயை தூர்வார வேண்டும்

விருதுநகர் : மண்மேடாகி போன வெள்ளூர் தாதப்பெருமாள் கண்மாயை தூர்வார வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். விருதுநகர் அருகே வெள்ளூர் தாதப்பெருமாள் கண்மாய் 20 ஏக்கர் பரப்பளவு உடையது. கண்மாயை நம்பி 108 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. கண்மாய் விவசாயத்திற்கு மட்டுமல்லாது ஆயிரக்கணக்கான கால்நடைகள், மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது. மூன்று போக விளைச்சல் நடைபெற்ற கண்மாய் முறையாக தூர்வாரப்படாமல் புதர்மண்டி கிடப்பதால் விவசாய பரப்பளவும், விளைச்சலும் குறைந்து வருகிறது. மண்மேவி காட்சி தரும் கண்மாய்க்கு வரும் கால்வாய் ஆக்கிரமிப்பு அடைப்பால் தண்ணீர் வரத்தும் குறைந்து விட்டது. மண்மேடாகி விட்டதால், கண்மாய் நிறைந்தாலும் விவசாயத்திற்கு பயன்படாது. கண்மாய் நீரை நம்பி நெல் நடவு செய்தால் நாற்றுகள் வளரும் போது கண்மாயில் தண்ணீர் வற்றி நெல்விளைச்சல் அறுவடை செய்ய முடியாமல் போய்விடுகிறது. அதனால் விவசாயிகள் நெல் விவசாயத்தை கைவிட்டு விட்டனர். இதனால் விவசாயம் நடைபெற்ற விளைநிலங்கள் தற்போது கருவேல் மரங்களும், புதர் மண்டி கிடக்கின்றன. வெள்ளூர் தாதப்பெருமாள் கண்மாயை முறையாக தூர்வாரி மழைநீரை சேமிக்கவும், மடை, ஷட்டர்களை சரி செய்யவும், வரத்து கால்வாய்களை சரி செய்யவும் உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும். ஆமத்தூரை சுற்றிய பல கண்மாய்கள் மண்மேடாகி கிடப்பதால் விவசாயத்தை நம்பியிருந்து விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்….

The post மண்மேடாகி போன கண்மாயை தூர்வார வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: