மண்டைக்காடு கோயிலில் ரூ.32 லட்சம் காணிக்கை வசூல்

 

குளச்சல், ஜூன்25: மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக 9 நிரந்தர உண்டியல்கள் மற்றும் 7 குடங்கள் ஆகியன வைக்கப்பட்டுள்ளன. இந்த உண்டியல்கள் கடந்த மாசிக்கொடைக்கு பின்பு நேற்று குமரி மாவட்ட திருக்கோயில்கள் இணை ஆணையர் ஜாண்சிராணி, உதவி ஆணையர் தங்கம், பத்மநாபபுரம் தேவசம் தொகுதி கண்காணிப்பாளர் சுப்பிரமணியன், ஆய்வாளர் தர்மேந்திரா, கோயில் ஸ்ரீகாரியம் செந்தில் குமார், மராமத்து பொறியாளர் ஐயப்பன் மற்றும் கோயில் ஊழியர்கள், சுயஉதவிக்குழு பெண்கள், பக்தர்கள் முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டது. இதில் ரூ.32,23,477 ரொக்கமாகவும், 70.8 கிராம் தங்கம், 235 கிராம் வெள்ளி மற்றும் வெளிநாட்டு கரன்சிகளும் கிடைக்கப்பெற்றன.

The post மண்டைக்காடு கோயிலில் ரூ.32 லட்சம் காணிக்கை வசூல் appeared first on Dinakaran.

Related Stories: