மதுரை, ஜூலை 8: தமிழ்நாடு மதுரை, ஈரோடு, கரூர், நாமக்கல், திருப்பூர், கோவை மற்றும் நீலகிரி ஆகிய 6 மண்டலமாக பிரிக்கப்பட்டு 38மாவட்டங்களிலும் ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு, விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டிகள் இரு நாட்கள் நடந்தன. இதில் மதுரை மண்டலத்திற்குட்பட்ட மாவட்ட அளவிலான 17வயதிற்குட்பட்டோருக்கான போட்டியில் 8 அணிகள் மோதின.
இறுதியில் வாடிப்பட்டி அணியுடன் மோதிய மதுரை திருநகர் அணி 5 கோல்கள் அடித்து வெற்றி பெற்றது. லீக் சுற்று போட்டியில் மதுரை அணி 3 புள்ளிகளை பெற்று முதலிடம் பிடித்தது. இதன் மூலம் மண்டல அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றது. வெற்றி பெற்ற அணிக்கு நடந்த பரிசளிப்பு விழாவில் ரிசர்வ் லைன் ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாட்டின் இணை செயலாளர் சார்லஸ்டிக்ஸன் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் பிரபு உள்பட பலர் பங்கேற்றனர்.
The post மண்டல ஹாக்கி போட்டிக்கு மதுரை அணி தகுதி appeared first on Dinakaran.