மக்கள் குறைதீர் முகாமில் நலத்திட்ட உதவிகள்

நாமக்கல், மார்ச் 14: நாமக்கல்லில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் ஸ்ரேயாசிங்  தலைமை வகித்து, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார். கூட்டத்தில், கலந்துகொண்ட பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி 242 மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர். மனுக்களை பெற்ற கலெக்டர் அவற்றை உரிய துறை அதிகாரிகளிடம் வழங்கி மனுக்களை பரிசீலனை செய்து விரைவில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.  பின்னர், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ், திருச்செங்கோடு தாலுகா பட்லூர் தொழிற்குழுவினருக்கு விவசாய கழிவுகளிலிருந்து டீ கப் தயாரிக்கும் தொழில் தொடங்குவதற்கு, மாவட்ட கலெக்டரின் மானிய விடுவிப்பு தொகையாக ₹7.63 லட்சம் மதிப்பிலான பாங்க் டிராப்ட்டை வழங்கினார். மேலும், கலெக்டரின் விருப்புரிமை நிதியின் கீழ், மாற்றுத்திறனாளி மங்கையர்க்கரசி என்பவருக்கு ₹5,600 மதிப்பிலான தையல் மெசினை கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுலவர் மணிமேகலை, சமூக பாதுகாப்பு திட்ட சப்கலெக்டர் பிரபாகரன், கலெக்டரின் நேர்முக உதவியாளார் (பொது) சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்….

The post மக்கள் குறைதீர் முகாமில் நலத்திட்ட உதவிகள் appeared first on Dinakaran.

Related Stories: