பொன்னமராவதி, ஏப். 17: பொன்னமராவதி வட்டார விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு நடைபெற்றது. பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத சோழீஸ்வரர் கோயிலில் விநாயகர் மற்றும் நாகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதிகளைச் சார்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். அதுபோல பொன்னமராவதி செல்வ விநாயகர் கோயில், சங்கரன்குண்டு விநாயகர், ஆவுடையநாயகி சமேத சோழீஸ்வரர் கோயில், கோட்டை பிள்ளையார் கோயில் உள்ளிட்ட கோயில்களில் நடைபெற்ற சங்கடஹர சதுர்த்தி வழிபாட்டில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
The post பொன்னமராவதி வட்டார விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு appeared first on Dinakaran.
