தேவதானப்பட்டி, ஜூன் 23: தேவதானப்பட்டி அருகே மேல்மங்கலம் கிராமத்தில் பட்டாளம்மன், முத்தையா கோவில் உள்ளது. இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலில் அனைத்து தரப்பு மக்களும் வழிபாடு செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்து அறநிலையத்துறையின் கீழ் வரும் 27ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. தற்போது அதற்கான வேலைகளும் நடைபெற்று வருகிறது.
இதில் மேல்மங்கலம் அம்மாபட்டி பகுதியைச் சேர்ந்த ஒரு தரப்பினர் தங்கள் சமுதாயத்திற்கு கோவில் கும்பாபிஷேகத்தில் உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என மேல்மங்கலம் ராஜகாளியம்மன் கோவில் முன்பு டென்ட் அமைத்து தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் அறநிலையத்துறை அதிகாரிகள், போலீசார், வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
The post பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.
