பெருமாள் கோயிலுக்கு செல்ல பாதை வசதி கலெக்டரிடம் மனு

தர்மபுரி, செப்.3: தர்மபுரி மாவட்டம், வே.முத்தம்பட்டியில் பெருமாள் கோயிலுக்கு சென்று வழிபட பாதை அமைத்து தரக்கோரி ஊர்பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். தர்மபுரி மாவட்டம், வே.முத்தம்பட்டி அருகே கிட்டம்பட்டி தண்டா கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர், குறைதீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: வே.முத்தம்பட்டி கிராமத்தில், பட்டா நிலத்தில் பெருமாள் கோயில் உள்ளது. ஊர்பொதுமக்கள் விழாக்காலங்களில் சுவாமி தரிசனம் செய்தவற்காக 3 அடி வரப்பு பாதையில் சென்று வருகின்றனர். மேலும், கோயிலுக்கு சொந்தமாக மானிய நிலம் உள்ளது. இந்நிலையில், கோயில் வழிபாட்டிற்கு செல்லும் பாதையை பயன்படுத்த சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். எனவே, கோயிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்டு பொதுமக்கள் பெருமாள் கோயிலுக்கு தரிசனம் செய்ய பாதை அமைத்து தர வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

The post பெருமாள் கோயிலுக்கு செல்ல பாதை வசதி கலெக்டரிடம் மனு appeared first on Dinakaran.

Related Stories: