பெருந்துறை அருகே திமுக செயல் வீரர்கள் கூட்டம் ஈரோட்டில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது குறித்து விரைவில் ஆலோசனை உலக சம்ஸ்கிருத தின விழா

 

ஈரோடு, செப். 4: நந்தா ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துமனையின் சம்ஹிதா சித்தாந்த் மற்றும் சம்ஸ்கிருத துறை சார்பில் உலக சம்ஸ்கிருத தின விழா நடைபெற்றது. இதில், ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவர் சண்முகன் தலைமை வகித்தார். கேரள மாநிலம், பாலக்காட்டில் செயல்பட்டு வரும் சாந்திகிரி ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியின் பேராசிரியர் நிரஞ்சனா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை தொடங்கிவைத்து பேசினார்.

நந்தா கல்வி நிறுவனங்களின் முதன்மை நிர்வாக அலுவலர் ஆறுமுகம், முதன்மை நிர்வாக அலுவலர் கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நந்தா ஆயுர்வேத கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முதல்வர் மருத்துவர் கிருத்திகா வரவேற்றார். சம்ஸ்கிருத மொழியின் பெருமைகள், முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. விழாவில் ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மாணவர்கள் மற்றும் மருத்துவர்கள் 120 பேர் பங்கேற்றனர். விழாவை ஏற்பாடு செய்திருந்த ஆசிரியர்கள், மாணவர்களுக்கு ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளையின் செயலர் நந்தகுமார் பிரதீப் மற்றும் நந்தா கல்வி நிறுவனங்களின் செயலர் திருமூர்த்தி பாராட்டு தெரிவித்தனர்.

 

The post பெருந்துறை அருகே திமுக செயல் வீரர்கள் கூட்டம் ஈரோட்டில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது குறித்து விரைவில் ஆலோசனை உலக சம்ஸ்கிருத தின விழா appeared first on Dinakaran.

Related Stories: