பெரம்பலூர் மாவட்டத்தில் தேசிய மாணவர் படையை அமைக்க கலெக்டர் பரிந்துரைக்க வேண்டும் முப்படை முன்னாள் ராணுவத்தினர் நலச்சங்கம் வலியுறுத்தல்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் என்சிசி எனப்படும் தேசிய மாணவர் படையை அமைத்துத்தர அரசுக்கு மாவட்ட கலெக்டர் பரிந்துரைக்க வேண்டும் என பெரம்பலூரில் நடைபெற்ற முப்படை முன்னாள் ராணுவத்தினர் நலச்சங்க கூட்டத்தில் முக்கியத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பெரம்பலூர் மாவட்ட முப்படை முன்னாள் ராணு வத்தினர் நலச்சங்கக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தின் மேற்குபுறம் உள்ள கூட்ட அரங்கில் நேற்று(3ம்தேதி) நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க தலைவர் ஜீவப்பெருமாள் தலைமை வகித்தார். உபத் தலைவர் வீரபாண்டியன், கவுரவத் தலைவர் முருகேசன், செயலாளர் ரங்கன், தர்மராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.உபசெயலாளர் முத்துசாமி, பொருளாளர் நாகராஜ், ஒருங்கிணைப்பாளர்கள் தேவராஜ், முத்துசாமி, சச்சிதானந்தன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

The post பெரம்பலூர் மாவட்டத்தில் தேசிய மாணவர் படையை அமைக்க கலெக்டர் பரிந்துரைக்க வேண்டும் முப்படை முன்னாள் ராணுவத்தினர் நலச்சங்கம் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: