பெண் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை ஆரணியில் குடும்ப தகராறில்

ஆரணி: ஆரணி டவுன் ராமகிருஷ்ணாப்பேட்டை முத்துமாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம்(44), இவர், விசைத்தறி தொழிலாளி. இவரது, மனைவி பூங்கோதை(43), எஸ்.வி.நகரம் பகுதியில் உள்ள ஓட்டலில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். மேலும், குடும்ப செலவிற்காக மனைவி பூங்கோதை மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் கடன் வாங்கி தனது கணவரிடம் கொடுத்துள்ளார். அதன்பின்னர், அந்த கடனை முறையாக செலுத்துவதில்லையாம். இதனால், கடனை செலுத்துவதில் கணவன் மனைவி இடையே கடந்த சில வாரங்களாக அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதேபோல், நேற்றுமுன்தினம் இரவு சாப்பிடும்போது, கணவன் மனைவி இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, ஆறுமுகம் தனது மனைவியை திட்டிவிட்டு வெளியே சென்றுள்ளார். இதனால், மனவேதனை அடைந்த பூங்கோதை இவரவு வீட்டில் அவரது புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

The post பெண் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை ஆரணியில் குடும்ப தகராறில் appeared first on Dinakaran.

Related Stories: