டெல்லி : புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கான திட்டமதிப்பு ரூ.1,250 கோடியாக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் ராஷ்ட்ரபதி பவனுக்கு அருகில் சுமார் 13 ஏக்கர் இடம் ஒதுக்கப்பட்டு புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. 64,500 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்படும் நாடாளுமன்ற கட்டிடத்திற்கு கடந்த 2020ம் ஆண்டு டிசம்பரில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 977 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்ட நாடாளுமன்ற கட்டிடத்தின் கட்டுமான பணிகளை டாடா நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.கொரோனா காலகட்டத்திலும் நாடாளுமன்ற கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கான திட்ட மதிப்பு 283 கோடி ரூபாய் உயர்த்தப்பட்டது. இது முந்தைய திட்ட மதிப்பை விட 29%அதிகமாகும். இதனால் புதிய நாடாளுமன்றத்திற்கான திட்ட மதிப்பு ரூ.1250 கோடி ஆக அதிகரித்துள்ளது. 75ம் ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு முன்னர் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டு இருந்தது. பின்னர் அக்டோபர் மாதத்திற்குள் பணிகளை கட்டி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. …
The post புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கான திட்டமதிப்பு ரூ.1,250 கோடியாக உயர்வு : முந்தைய திட்ட மதிப்பை விட 29% கூடுதலாகும்!! appeared first on Dinakaran.