பீர் பாட்டிலால் தாக்கி டிரைவர் மண்டை உடைப்பு வாலிபருக்கு போலீஸ் வலை வந்தவாசி அருகே முன்விரோதம்

வந்தவாசி, டிச.30: வந்தவாசி அடுத்த அகரகொரக்கோட்டை கிராமத்தை சேர்ந்த தனியார் கல்லூரி பஸ் டிரைவர் தலைமீது பீர் பாட்டிலால் தாக்கி தலைமறைவாக உள்ள வாலிபரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த அகரகொரக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் கெங்கன்(48). இவர் தெள்ளாரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பஸ் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ்(32) என்பவருக்கும் குடும்ப விவகாரம் சம்பந்தமாக முன் விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த 25ம்தேதி அன்று அங்குள்ள ஏரிக்கரை அருகே கெங்கன் இருந்துள்ளார். அப்போது அங்கு சென்ற பிரகாஷ் கெங்கன் வீண் தகராறு செய்து ஆபாசமாக பேசி கையில் வைத்திருந்த பீர் பாட்டிலால் தலை மீது தாக்கினாராம். இதில் தலையில் பலத்த காயம் அடைந்தார். கெங்கன் வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார். சம்பவம் குறித்து கெங்கன் தெள்ளார் போலீசில் நேற்று புகார் செய்தார் அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் சக்திவேல் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள வாலிபர் பிரகாஷை வலைவீசி தேடி வருகின்றார்.

The post பீர் பாட்டிலால் தாக்கி டிரைவர் மண்டை உடைப்பு வாலிபருக்கு போலீஸ் வலை வந்தவாசி அருகே முன்விரோதம் appeared first on Dinakaran.

Related Stories: