பிரதமர் மீது கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது மக்கள் பேரழிவு

சென்னை: பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது மக்கள் விரோத பேரழிவு என்ற குற்றச்சாட்டிலிருந்து பிரதமர் மோடி தப்ப முடியாது என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:ஒன்றிய அரசு 2016 நவம்பர் 8ல் கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என்று 6 ஆண்டுகள் கழித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இதில், நீதிபதி பி.வி. நாகரத்தினம்மா பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்தது செல்லாது என்ற மாறுபட்ட தீர்ப்பை மிகத் தெளிவாக வழங்கியிருக்கிறார்.பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்த 2016 நவம்பர் 8க்கு முன்பு 2 மாதங்கள் வரை ரிசர்வ் வங்கி கவர்னராக டாக்டர் ரகுராம் ராஜன் தான் பொறுப்பில் இருந்தார். அவர் ஒன்றிய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான நிலை கொண்டிருந்தார். உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகும், பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது அப்பட்டமான ஒரு மக்கள் விரோத பேரழிவு நடவடிக்கை என்ற குற்றச்சாட்டில் இருந்து பிரதமர் மோடி தப்ப முடியாது.  …

The post பிரதமர் மீது கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது மக்கள் பேரழிவு appeared first on Dinakaran.

Related Stories: