தஞ்சாவூர், மே 27: தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் கிராம உதவியாளர்கள் வட்ட பொதுக்குழு கூட்டம் சங்க அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கூட்டத்தில் ஏக மனதாக சில தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புதிதாக வந்திருக்கும் கிராம உதவியாளர்களுக்கு சிபிஎஸ் பிடித்தம் செய்ய வேண்டும். கிராம நிர்வாக அலுவலகங்களில் பணிபுரியும் புரோக்கர்களை வெளியேற்ற வேண்டும்.
பணி பதிவேட்டில் முறையாக பதிவு செய்து வழங்க வேண்டும். பாபநாசம் வட்டத்தில் கிராமங்களில் கிராம உதவியாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் கிராம உதவியாளர்களை நியமிக்க வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. வட்ட பொதுக்குழுவை வட்ட செயலாளர் மனோகரன் வழி நடத்தினார். சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் கார்த்திக், முன்னாள் மாநில பொருளாளர் முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினரர். வட்ட பொருளாளர் மேகநாதன் நன்றி கூறினார்.
The post பாபநாசம் வட்டத்தில் கிராம உதவியாளர்கள் காலி பணியிடங்களை நிரப்ப கோரிக்கை appeared first on Dinakaran.
