பாடாலூர் காவல்துறையினர் பொதுமக்களிடையே விழிப்புணர்வு

பாடாலூர்:பெரம்பலூர் மாவட்ட எஸ்பி.உருவாக்கப்பட்ட மிகவும் சிறப்பான திட்டமான கிராம காவல் திட்டத்தின் மூலம் பொது மக்களுக்கு பல்வேறு நன்மைகள் ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வுகள் தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த கிராம காவல் திட்டமானது மாவட்டத்தில் பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்தும் வகையிலும் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து அதற்கான தீர்வை அளிக்க வேண்டும். இதன் மூலம் குற்றங்களை பெரிதும் குறைக்கும் முக்கிய நோக்கத்தோடு பெரம்பலூர் மாவட்ட எஸ்பி. ஷ்யாம்ளா தேவி உருவாக்கப்பட்டு இத்திட்டத்தின் மூலம் பொதுமக்கள் பல்வேறு நன்மைகள் அடைந்து வருகின்றனர். இந்நிலையில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தோடு கிராம காவலர்கள் நேற்று தங்களது தொடர் காவல் பணிகளுக்கு மத்தியிலும் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கிராமங்களுக்கு சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

 

The post பாடாலூர் காவல்துறையினர் பொதுமக்களிடையே விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Related Stories: