பஸ் மோதி முதியவர் பலி

 

மதுரை, ஜூன் 20: மதுரை பெத்தானியாபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகன் (60). திருமணம் மற்றும் சுபநிகழ்சிகளுக்கு போட்டோ கிராபராக பணியாற்றிய இவர், நேற்று காலை டூவீலரில் ஆரப்பாளையம் மஞ்சள்மேடு பகுதியில் வந்துகொண்டிருந்தார். அப்போது தேனியில் இருந்து மதுரை வந்த தனியார் பஸ், அவரது டூவீலர் மீது மோதியதில் முருகன், உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து குறித்து கரிமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.

The post பஸ் மோதி முதியவர் பலி appeared first on Dinakaran.

Related Stories: