பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள்

காரைக்குடி, அக்.27: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் லிட் சார்பில் பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ் இயக்கப்பட உள்ளது. அதேபோல் வார விடுமுறை நாளை முன்னிட்டு சிறப்பு பஸ் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் பொதுமக்களின் வசதிக்காக நாளை மற்றும் 29ம் தேதி கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுகோட்டை, திருச்சி, அரியலூர், ஜெயம்கொண்டம், பெரம்பலூர், மணப்பாறை, புதுக்கோட்டை நாகப்பட்டினம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், மன்னார்குடி, மயிலாடுதுறை, காரைக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம் ராமேஸ்வரம், கரூர் ஆகிய பகுதிகளில் இருந்து திருவண்ணாமலைக்கு 150 கூடுதல் சிறப்பு பஸ் இயக்கப்பட உள்ளது.

திருவண்ணாமலை சென்னை தடத்தில் 50 கூடுதல் சிறப்பு பஸ் இயக்கப்பட உள்ளது. தவிர வார விடுமுறை தினத்தை முன்னிட்டு நாளை, 29ம் தேதிகளில் திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊர்களில் இருந்து சென்னைக்கும். சென்னையில் இருந்து இதே ஊர்களுக்கு 100 சிறப்பு பஸ் இயக்கப்பட உள்ளது. திருச்சியில் இருந்து கோவை, திருப்பூர், மதுரை ஆகிய இடங்களுக்கும், கோவை, திருப்பூர், மதுரை ஆகிய இடங்களில் இருந்து திருச்சிக்கும், திருச்சியில் இருந்து காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டிணம், வேளாங்கண்ணி ஆகிய ஊர்களுக்கு 75 பஸ் என கூடுதாக 175 சிறப்பு பஸ் இயக்கப்பட உள்ளது. மீண்டும் அவரவர் ஊர்களுக்கு திரும்ப செல்ல 29, 30ம் தேதிகளில் சென்னை தடத்தில் 100, பிறதடங்களில் 75 சிறப்பு பஸ் இயக்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் appeared first on Dinakaran.

Related Stories: