பழநியில் உருவாகும் திடீர் லாட்ஜ்களை ஆய்வு செய்ய கோரிக்கை

பழநி, ஜூலை 22: இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருக்கு இந்து தமிழர் கட்சியின் தலைவர் ராம.ரவிக்குமார் விடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: பழநி நகரில் பாதயாத்திரை பக்தர்கள் நடந்து செல்ல சாலையின் இருபுறமும் வாகனங்கள் பயன்படுத்த முடியாத வகையில் நடைமேடை அமைக்க வேண்டும். கூடுதல் விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை கண்காணித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். பழநி நகரில் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத லாட்ஜ்கள், திருமண மண்டபங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து, சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதிகளவில் உருவாகி வரும் திடீர் லாட்ஜ்களின் கட்டிட பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். பழநி கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களின் விபரங்களை முறைப்படுத்தி ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகம் முழுவதும் சுமார் 4.5 லட்சம் ஏக்கர் நிலங்கள் அறநிலையத்துறைக்கு சொந்தமானது. இதில் தற்போது சுமார் 82 ஆயிரம் ஏக்கர் நிலங்களின் வருமானம் மட்டுமே அறிநிலையத்துறைக்கு கிடைக்கிறது. இதர வருமானத்தை ஆக்கிரமிப்பாளர்கள் அனுபவித்து வருகின்றனர்.

The post பழநியில் உருவாகும் திடீர் லாட்ஜ்களை ஆய்வு செய்ய கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: