பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி, புகைப்பட கண்காட்சி

தர்மபுரி, ஜூலை 19: தர்மபுரியில் தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி மற்றும் தமிழ்நாடு அரசின் ஈராண்டு சாதனை விளக்க சிறப்பு புகைப்பட கண்காட்சி நடந்தது. ஆண்டுதோறும் ஜூலை 18ம் தேதி தமிழ்நாடு நாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தர்மபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு நாள் உருவான வரலாறு தொடர்பாக பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடந்தது. மாவட்ட கலெரக்டர் சாந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பதாகைகளுடன் பங்கேற்றனர். இப்பேரணி முக்கிய வீதிகள் வழியாக அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியை அடைந்தது. அங்கு, தமிழ்நாடு நாள் முக்கியத்துவத்தினை இளைய தலைமுறையினர் அறியும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் புகைப்படக் கண்காட்சி நடந்தது.

முன்னதாக, அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வள்ளல் அதியமான் மற்றும் ஔவையார் திருவுருவ சிலைகளுக்கு கலெக்டர் மாலை அணிவித்தார். நிகழ்ச்சிகளில் எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம், நகர்மன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது, முன்னாள் எம்எல்ஏ தடங்கம் சுப்ரமணி, முதன்மைக் கல்வி அலுவலர் குணசேகரன், தலைமை ஆசிரியர்கள் கலைச்செல்வி, தங்கவேல், துணை தலைமை ஆசிரியர் முருகன், பிடிஏ தலைவர்கள் தங்கமணி, மே.அன்பழகன், நகர செயலாளர் நாட்டான் மாது, நிர்வாகிகள் முல்லைவேந்தன், சுருளி, காசி, சமயா ராஜா, குமார், கனகராஜ் உள்பட தொடர்புடைய அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

The post பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி, புகைப்பட கண்காட்சி appeared first on Dinakaran.

Related Stories: