பள்ளி சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலியான விவகாரம்; பள்ளிக்கல்வி இயக்குனர், கலெக்டர் அறிக்கை அளிக்க வேண்டும்.! மனித உரிமை ஆணையம் உத்தரவு

சென்னை: நெல்லையில் பள்ளியின் கழிவறை சுவர் இடிந்து 3 மாணவர்கள் பலியான விவகாரம் தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குனர், மாவட்ட ஆட்சியர் 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நெல்லையில் பள்ளியின் கழிவறை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் அன்பழகன், சுதீஷ், விஸ்வரஞ்சன் ஆகிய மூன்று மாணவர்கள் பலியானார்கள். இந்த விவகாரத்தில் பள்ளித் தாளாளர் செல்வகுமார், தலைமை ஆசிரியை ஞானசெல்வி, ஒப்பந்ததாரர் ஜான்கென்னடி ஆகியோர் மீது நெல்லை டவுன் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைதான நிலையில், நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக பத்திரிக்கைகளில் வெளியான செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. மேலும் வழக்கை விசாரித்த மனித உரிமை ஆணையம் இந்த சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தமிழக பள்ளிக் கல்வி இயக்குனர், நெல்லை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்….

The post பள்ளி சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலியான விவகாரம்; பள்ளிக்கல்வி இயக்குனர், கலெக்டர் அறிக்கை அளிக்க வேண்டும்.! மனித உரிமை ஆணையம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: