பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக காலை, மாலை நேரத்தில் பேருந்துகளை இயக்க வேண்டும்

வலங்கைமான், ஜூன் 24: பள்ளி, கல்லூரி மாணவர்க ளுக்காக காலை, மாலை பேருந்துகளை இயக்க வேண்டும். இ,கம்யூ., கிளை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றம். வலங்கைமான் ஒன்றியம் மாணிக்கமங் கலம் ஊராட்சி கீழ சேதுராயநத்தத்தில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 11- வது கிளை மாநாட்டிற்கு பூசாந்திரம் தலைமை வகித்தார்.

கிளை செயலாளர் வேலை அறிக்கையினை முன் வைத்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வலங்கைமான் ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் புதிய பொறுப்பாளர் களாக கிளை செயலாளர் பூசாந்திரம், துணை செயலாளர் சரவணன், பொருளாளர் சின்னம்மாள் ஆகியோரை அறிவித்து,இன்றைய, நாளைய எதிர்கால அரசியல் கடமைகளை எடுத்துரைத்தார்.மாநாடு கூட்டத்தில் கட்சியின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், மகளிர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் தடம் எண் 48 சி பேரூந்து மாலையில் 4.45 மணிக்கு நீடாமங்கலத்தில் இருந்து எடுத்தால் அரையூர், அன்பிற்குடையான், சேதுராநத்தம், மாணிக்கமங்கலம், கிள்ளியூர், குச்சி பாளையம், வாடாமங்கலம், வேடம்பூர் ஆகிய கிராமங்களில் இருந்து நகர பகுதிக்கு படிக்க செல்லும் மாணவ, மாணவிகள் பயன் பெறும் வகையில் பேருந்துகளை இயக்க வேண்டும். மன்னார்குடி, நீடாமங்கலம், மாணிக்கமங்கலம் வழியாக ஆலங்குடி, குடவாசல் வரையில் புதிய பேரூந்துகள் இயக்க வேண்டும். சேதுராயநத்தம் குடியானத் தெரு கிராம சாலையை செப்பனிட்டு தர வேண்டும்.

வாடா மங்கலம் கிராமத்திற்கு மயான சாலையை செப்பனிட்டு தர வேண்டும். குச்சி பாளையம் குடியானத் தெரு செல்லும் கிராம சாலையை செப்பனிட்டு தர வேண்டும். கஜா புயலில் அறுந்து விழுந்த மின் கம்பிகளை சரி செய்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டன. முடிவில் புதிய செயலாளர் பூசாந்திரம் அனைவருக்கும் நன்றி கூறினார்.

The post பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக காலை, மாலை நேரத்தில் பேருந்துகளை இயக்க வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: