பராமரிப்பு பணிகள் காரணமாக திருவையாறு, நடுக்காவேரியில் இன்று மின்நிறுத்தம்

 

திருவையாறு, ஏப்.29: பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் திருவையாறு நகர் பகுதியில் இன்று மின்சார விநியோகம் நிறுத்தப்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக திருவையாறு மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் ராஜா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: திருவையாறு உபகோட்டத்திற்கு திருவையாறு நகர் பிரிவு அலுவலகத்திற்கு உட்பட்ட திருவையாறு நகர் மின் பாதையில் அவசரகால பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் இன்று 29.04.2025 செவ்வாய்கிழமை காலை 10மணி முதல் மதியம் 12மணி வரை திருவையாறு, ராயம்பேட்டை, திருப்பழனம், பருத்திக்குடி, காருகுடி, தில்லைஸ்தானம் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் மின் விநியோகம் இருக்காதுஎன் றும், அதேபோல் நடுக்காவேரி மின் பாதையில் அவசரகால பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால இன்று (29.4.2025) மதியம் 2 மணி முதல் 4மணி வரை நடுக்கடை, கல்யாணபுரம், சின்னகண்டியூர், பொன்னாவரை, முகமதுபந்தார், ராம் நகர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்றும் திருவையாறு மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் ராஜா செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

The post பராமரிப்பு பணிகள் காரணமாக திருவையாறு, நடுக்காவேரியில் இன்று மின்நிறுத்தம் appeared first on Dinakaran.

Related Stories: