பன்றிகள் அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் முடிவு

 

பழநி, ஜூன் 10: பழநி நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அனுமதி இல்லாமல் பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் அச்சுறுத்தலாகவும், பொது சுகதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையிலும் பன்றிகளை வளர்ப்பதும், தெருக்கள் மற்றும் கழிவு நீர் கால்வாய்களில் திரிய விடுவதும் கடுமையான குற்றம் என நகராட்சி நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பழநி நகருக்குள் எவரும் பன்றிகளை வளர்க்கவோ, திரிய விடுவதோ கூடாது.

மீறி வளர்க்கப்படும், திரிய விடப்படும் பன்றிகள் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் நகராட்சி மூலம் பிடிக்கப்பட்டு நகருக்கு வெளியே அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது கூறியதாவது, பிடிக்கப்பட்ட பன்றிகளின் மீது எவரேனும் உரிமை கொண்டாடி வந்தால் அவர்கள் மீது தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு சட்டம் 1939 மற்றும் தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920ம் சட்ட விதிகளின்கீழ் நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post பன்றிகள் அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் முடிவு appeared first on Dinakaran.

Related Stories: