மயிலாடுதுறை, மே 28: வைகாசி திருவிழாவை முன்னிட்டு பன்னீர் வேலி கிராமத்தில் மகாகாளியம்மன் கோயில் 18ம் ஆண்டு கரகம், காவடி, பால் குட திருவிழா நடைபெற்றது.
மயிலாடுதுறையை அடுத்துள்ளது பன்னீர் வேலி கிராமத்தில் மகா மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு பால்குடம், கரகம், காவடிகள் பக்தர்கள் சுமந்து, பழவாற்றங்கரையிலிருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர். பால்குட ஊர்வலமானது கோயிலை வந்தடைந்த, பின் மகா மாரியம்மனுக்கு பால் அபிசேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை நடைபெற்றது. இந்த பால்குடம், கரகம், அலகு காவடிகளை நூற்றுக்கு மேற்பட்ட பக்தர்கள் எடுத்து வந்து அம்பாளின் அருளை பெற்றனர். இதையடுத்து நேற்று இரவு கரகம் மற்றும் கருப்பண்ணசாமி, பச்சைக்காளி பவள காளி வேடம் அணிந்த ஊர்வலம் நடைபெற்றது.
The post பன்னீர்வேலி கிராமத்தில் மகாகாளியம்மன் கோயில் பால்குட திருவிழா appeared first on Dinakaran.
