தர்மபுரி, ஏப்.17: தர்மபுரியில், பண்ருட்டி பலாப்பழம் விற்பனை கிலோ ரூ.30க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் திண்டிவனம், கடலூர் மாவட்டங்களிலும், தர்மபுரியில் வத்தல்மலையிலும், இதுதவிர கேரள மாநிலத்திலும் பலா அதிகமாக விளைவிக்கப்படுகிறது. கடலூர் திண்டிவனம் மற்றும் பண்ருட்டி பகுதியில் விளையும் பலாப்பழங்கள் சுவை மிகுந்தது என்பதால், பொதுமக்களிடையே வரவேற்பு அதிகமாக உள்ளது. கடந்த சில நாட்களாக, பண்ருட்டியில் இருந்து தர்மபுரி சந்தைக்கு பலாப்பழங்கள் வரத்து அதிகரித்துள்ளது. தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே, கிலோ ரூ.30க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுபற்றி வியாபாரிகள் கூறுகையில், ‘தற்போது பலா சீசன் தொடங்கி உள்ளது. இதனால், பண்ருட்டி பகுதியில் இருந்து பலாப்பழங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. ஒரு கிலோ ரூ.30 வீதம் விற்பனை செய்து வருகிறோம். இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்,’ என்றனர்.
The post பண்ருட்டி பலாப்பழம் கிலோ ரூ.30க்கு விற்பனை appeared first on Dinakaran.
