பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறை மனிதவள மேலாண்மை துறை என மாற்றம்: பேரவையில் மசோதா தாக்கல்

சென்னை: பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறையின் பெயரை மனிதவள மேம்பாட்டு துறை என்று பெயர் மாற்றும் சட்ட மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டப் பேரவையில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்துள்ள மசோதாவில் கூறியிருப்பதாவது:  மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர்களுக்காக வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டின் 20 சதவீத என்ற அளவிற்குள்ளாக, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள் (வன்னியகுல ஷத்திரியா), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள் மற்றும் வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் ஆகியோருக்கு முறையே 10.5 சதவீதம், 7 சதவீதம், 2.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கி தனி ஒதுக்கீடு சட்டம் இயற்றப்பட்டது. கடந்த ஜூன் 7ம் தேதி வெளியிடப்பட்ட அரசாணையில் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை மனிதவள மேலாண்மை துறை என மாற்றி ஓர் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இதற்கு ஏதுவாக தமிழ்நாடு அரசு பணியாளர்கள் (பணி நிபந்தனை) சட்டத்தில் திருத்தம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இவ்வாறு மசோதாவில் கூறப்பட்டுள்ளது….

The post பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறை மனிதவள மேலாண்மை துறை என மாற்றம்: பேரவையில் மசோதா தாக்கல் appeared first on Dinakaran.

Related Stories: