தேனாம்பேட்டை அஞ்சலகம் சார்பில் சிறுசேமிப்பு திட்ட முகாம்

சென்னை: தேனாம்பேட்டை அஞ்சலகம் சார்பில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சிறுசேமிப்பு திட்ட முகாம் தேனாம்பேட்டையில் நடந்தது.  சிறுசேமிப்பு திட்டத்தில் உள்ள பிரதம மந்திரியின் அட்டன் பென்சன் யோஜனா,  பி.எம்.எஸ்.பி.ஒய், பி.எம்.ஜெ.ஜெ.பி.ஒய் போன்ற பல்வேறு சிறுசேமிப்பு  திட்டங்கள் குறித்து தொடர்ந்து பொதுமக்களுக்கு அஞ்சலகங்கள் சார்பில் முகாம்கள் அமைக்கப்பட்டு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதற்காக இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு பொதுமக்களை பலனடைய செய்யும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்மூலம், சிறிய சிறிய தொகையை கணக்குகளில் இருப்பு வைக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இந்நிலையில், சென்னை மத்திய கோட்டத்திற்கு உட்பட்ட 24 அஞ்சல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் சிறுசேமிப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு வருகிறது. தேனாம்பேட்டை தபால் நிலையத்திற்கு உட்பட்ட ஆழ்வார்பேட்டை தெருவில் சிறுசேமிப்பு திட்ட முகாம் நடத்தப்பட்டது. முகாமை சென்னை மத்திய கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் அலோக் ஓஜா தொடங்கி வைத்து சிறுசேமிப்பு திட்டங்களில் உள்ள பலன்கள் மற்றும் அதன் கீழ் உள்ள பல்வேறு திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் விளக்கி கூறினார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: