நெல்லை : நெல்லையின் அடையாளமாக கருதப்படும் ஈரடுக்கு திருவள்ளுவர் மேம்பாலத்தின் கீழ்பாலம் போதிய பராமரிப்பின்றி உள்ளது. இதை சீரமைக்கவேண்டம் என வாகனஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.நெல்லையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக கருதப்படும் நெல்லை ஈரடுக்கு திருவள்ளுவர் மேம்பாலம் அமைக்கப்பட்டு சுமார் 50 ஆண்டுகளை நெருங்கியுள்ளது. 24 மணி நேரமும் வாகனபோக்குவரத்து நடைபெறும் இந்த பாலம் நெல்லை சந்திப்பு மற்றும் டவுன் பகுகளை இணைக்கும் முக்கிய போக்குவரத்துக்கு உதவுகிறது. மேல்பாலத்தில் கனரகவாகனங்களும் கீழ் பாலத்தில் இலகுரக மற்றும் இருச்சக்கர வாகனங்களும் பயணிக்கின்றன. தற்போது கீழ் பாலம் போதிய பராமரிப்பு இல்லாமல் உள்ளது. பாலத்தின் உள்பகுதியில் பல மின்விளக்குகள் சரியாக ஒளிரவில்லை. மேலும் சிலந்திவலை ஒட்டைகள் அதிகளவில் சூழ்ந்துள்ளன. காற்றுவீசும்போது பயணிகள் மீது ஒட்டடைகள் விழுகின்றன. பாலம் மறுசீரமைக்கப்பட்டபோது சில நாட்கள் பாலத்தின் தூண் மற்றும் சுவர்கள் ஆக்கிரமிக்காமல் பாதுகாக்கப்பட்டன. தற்போது ஆக்கிரமிப்புகளும் கீழ்பகுதியில் அதிகரித்துவருகின்றன. கீழ்பாலத்தில் இரவு நேரங்களிலும் வாகனஓட்டிகள் அதிகளவில் பயன்படுத்துவதால் இதை உடனடியாக சீரமைத்து பராமரிக்கவேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்….
The post நெல்லை ஈரடுக்கு மேம்பாலம் பராமரிக்கப்படுமா? வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.