ஈரோடு, ஜூன் 19: நுகர்வோர் அமைப்புகளுடனான காலாண்டுக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஜெயலட்சுமி தலைமை வகித்தார்.
இதில், ஈரோடு மாவட்ட தொழிலாளர் துறை தொழிலாளர் துணை ஆய்வர்கள், முத்திரை ஆய்வர்களுடன் ஈரோடு மாவட்ட நுகர்வோர் அமைப்பினரும் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில், எடையளவு, மின்னணு தராசுகள் முத்திரையின்றி பயன்படுத்துவது, பொட்டலப் பொருள்களை அதிகபட்ச சில்லறை விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும். ஆய்வுகளின் போது முரண்பாடுகள் கண்டறியப்பட்டால் தகுந்த அபராத நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
The post நுகர்வோர் காலாண்டு கூட்டம் appeared first on Dinakaran.
