நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா

போச்சம்பள்ளி, ஏப்.27: போச்சம்பள்ளி நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிபதி சண்முகநாதன் தலைமை தாங்கினார். நீதிபதிகள் தமோதிரன், கோகுல்கிருஷ்ணன், ஜெயந்தி, வஸ்தவா ஆனந்த், திருமலை, சண்முகமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கிருஷண்கிரி மாவட்ட முதன்மை நீதிபதி லதா கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டார். பின்னர் மரக்கன்றுகள் நடுதல் மற்றும் அதன் பயன்கள் குறித்தும் எடுத்துரைத்தார். இந்த நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஜெயபாலன், செயலாளர் ரகு, பொருளாளர் கோபிநாத், முன்னாள் தலைவர் புகழேந்தி, கபிலன், காளிமுத்து, சரண் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா appeared first on Dinakaran.

Related Stories: